Ragu Kethu Peyarchi Palan

Ragu Kethu Peyarchi Palan

    VIRUCHIKAM Ragu Kethu Peyarchi Palan

விருச்சிக ராசி நேயர்களே : கடந்த ஒன்றை ஆண்டுகளாக உங்கள் ராசிக்கு ஆறாம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் ராகு பகவான், ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் கேது பகவான் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையில் பல்வேறு நன்மைகளையும், ஒரு சில சங்கடங்களையும் வழங்கி வந்தார்கள். இந்த நிலையில் தான் 08.10.2023 அன்று ராகு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும், கேது பகவான் லாப ஸ்தானத்திற்கும் பெயர்ச்சியாகி, 26.04.2025 வரை அங்கிருந்து உங்களுக்கு ஒன்றை ஆண்டுகளுக்கு பலன்களை வழங்கிட உள்ளனர். 5ம் இடத்து ராகுவினால் சிந்தனையில் குழப்பங்கள் தோன்றும். மனதில் தேவையற்ற பயம் வந்து போகும். இதனால் உடல்நிலையில் லேசான பாதிப்புகள் உருவாகலாம். உடலில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சீராகும். வெளி உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது உடல் ஆரோக்யத்திற்கு நல்லது. எதையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசுவதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
எவரையும் எடுத்தெறிந்து பேசாமல், எல்லோரையும் அனுசரித்து செல்லும் பழக்கத்தினை வளர்த்துக் கொள்ளவும். 5-ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ள ராகுபகவான் எதிர்பாராத இடமாற்றத்தைத் தோற்றுவிப்பார். குடும்பத்தினருடன் இருக்கும் வாய்ப்புகள் குறையும். ஒரு சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உருவாகும்.
பணவரவுgal இருக்கும். கடன் பிரச்சனை பாதியாக குறையும். குடும்பத்தில் தடைப்பட்டு கொண்டு இருந்த சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசினால் வரும் பிரச்னைகள் குறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். சிலருக்கு சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டில் பொருள் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. உற்றார், உறவினர்களை அனுசரித்து போவது எல்லா வகையிலும் நல்லது.
ஒரு சில நேரங்களில் நீங்கள் நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த வில்லங்கம் நீங்கும். சொத்து பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
உத்யோகத்தில் வேலை சுமை குறையும். உத்யோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அயல்நாட்டுப் பணிக்காக காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் கூடி வரும். தொழில், வியாபார ரீதியாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். தொழில், வியாபாரம் தொடர்பாக நிறைய ஆலோசனைகள் கிடைக்கும்.
அநாவசிய செலவுகள் கட்டுப்படுத்தப்படும். அதேநேரத்தில் 11ம் இடத்தில் இருக்கும் கேது தான தர்ம காரியங்களுக்காக அதிகம் செலவழிக்க வைப்பார். மொத்தத்தில் வரவுள்ள ராகு கேது பெயர்ச்சியானது சிந்தனையில் குழப்பத்தைத் தந்தாலும், உங்கள் மதிப்பையும், மரியாதையையும் உயர்த்துவதோடு சமூகத்தில் புகழைப் பெற்றுத் தரும். மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி வாழ்வில் சரியான பாதையை காட்டுவதுடன் திடீர் யோகங்களை தருவதாக அமையும்.

( For Viruchikam : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Virchagam (Scorpio) [Stars: Visakam 4, Anusham 1,2,3,4 Kettai 1,2,3,4 quarters]

Brave, Bold & Courageous people are born under Virchagam. Wants to travel and enjoy the adventures and keep themselves to become famous and flying colours. Politics, government rankings, sports, military, police, leadership, educations, discovery and other areas they want to enjoy. Feeling happy and once in a while they feel low due to automatic planet transitions. Family situations become favour; but separation due to travel for work/business sometimes bring detachment. Some people become atheist if Jupiter in horoscope is not good. Good fighting spirit & stay well ahead of the allocated jobs are the keys of all improvements and support. Some people are capable to rewrite the history. Loneliness affects them quite often and need refreshment in many occasions. It is important to practice yoga or meditation to keep the stress level under control. Chances of settling life in different place from native.

Powerful new terms, policies & procedures can be defined by virchaga rasi people and able to run worldwide organisations easily to maintain everything on top. Individuals are so intelligent, motivated, who can contribute adequately to any project. Proper care and focused attention required for family matters. Be watchful with friends and know people always will try to grab something. 'Prevention is better than cure' proverb must be considered for health issues and caution required even if it is a small issue. Good health keep fit until 80 years. Mind is highly competitive in any environment to win anything; logical & technical approach winning always. Financial areas are fine and able to give loan or sponsor others for more profits. For some people; ruling the nation or state or organisation possible. Lucky colours are yellow, blue and green, stones are yellow sapphire, pearl and blue sapphire, and numbers are 3 & 8.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.